Saturday, June 14, 2008

ஞானஸ்நானம் - அறிய,புரிய,தெரிய வேண்டிய 10 காரியங்கள்

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்த்வத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும். என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின் கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல் வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

ஞானஸ்நானம் என்றால் என்ன?
ஞானஸ்நானம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும் தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம் பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம் பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல் செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to explain,I think.

இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல் ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும் உயர்வானது.
(source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0 )
(இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:http://en.wikipedia.org/wiki/Baptism

ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டைய 10 காரியங்கள் எவை?

ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?

1.தேவ நீதியை நிறைவேற்ற

யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். (மத்.3:14,15)

2.இரட்சிக்கப்ப
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)

3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)

4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)

5.பரலோகத்திற்குப் போக
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவான்3:5)

6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)

7.கிறிஸ்துவுடனடக்கம் பண்ணப்பட
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)

8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)

9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)

10. நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை
ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)

மேலே கண்ட பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பாமேறிய பின்னர் அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.

நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?


Also posted in:http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0

Monday, June 9, 2008

Welcome note

Beloved in Christ
Glory to the Almighty God through His son our beloved saviour Jesuchrist. This blog is going to echo the voice of the Lord Jesus . All works are in progress. Pray and expect great things from the Lord. Grace be with you.Amen.

சென்னை சீயோன் சபையின் வலைப்பூவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். வேதாகம சத்தியத்தை உலகம் எப்படியாவது கண்டு கொள்ளவேண்டுமே என்ற தணியாத தாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த வலைப்பூ இனி ஜீவவாசனையை உலகமெங்கும் வீசப் போகிற சத்தியப் பூவாக ஜொலிக்கப் போகிறது. ஆண்டவருக்கு சித்தமானால் வரும் காலங்களில் அனேக தேவ செய்திகள் இங்கு வெளியிடப்பட்டு தேவ நாம மகிமைக்காக ஆத்துமாக்களை போஷிக்க விரும்புகிறோம். ஜெபியுங்கள் எதிர்பாருங்கள்.